Infant Jesus Shrine
Church History
புலியூர் பகுதியில் தொடக்க காலத்தில் கிறிஸ்துவ குடும்பங்கள் ரொம்பவும் குறைவாக இருந்தது. செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை ஏற்பட்டதும் இதில் வேலை செய்ய கிறிஸ்துவ குடும்பங்கள் பல பகுதியிலிருந்து இங்கு குடி வந்தார்கள். மேதகு ஆயர் எம்.அம்புரோஸ் D.D.D.C.L., ஆண்டகை ஆசீருடன் 21.06.1994-ம் ஆண்டு புலியூர் பகுதியில் இந்தியன் நேஷனல் பள்ளியில் அருட்தந்தை. உபகாரசாமி அடிகளார் முதல் திருப்பலி துவக்கினார்கள். 1995-ம் ஆண்டு புலியூர் குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்ட இடம் வேண்டும் என்ற கோரிக்கை பணிவுடன் எழுந்தது. மேதகு ஆயர் அவர்கள் ஆசியுடனும், அருட்தந்தை உபகாரசாமி அவர்களின் வழிநடத்துதலிலும்48.5செண்ட் இடம் வாங்கப்பட்டது.
09.05.1996-ம் ஆண்டு ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மாதத்தின் இரண்டாவது வியாழன் இங்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இந்த வேளையில் பசுபதிபாளையம் புதிய பங்காக உருவானது. அதன் முதல் பங்குத் தந்தை அருட்தந்தை சைமன் பீட்டர் இந்த திருத்தலத்திற்கும் பொறுப்பாளராக ஆயர் அவர்கள் நியமித்தார்கள்.
1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு வியாழனும் இங்கு திருப்பலியும், நவநாளும் நடைபெற துவங்கியது, ஒவ்வொரு வாரமும் இங்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை பெருகியது.
1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ஞாயிறு திருப்பலி காலை 11.00 மணிக்கு துவங்கப்பட்டது. 20.11.1997 முதல் 15.01.1998 வரை முதன் முதலாக ஒன்பது வார சிறப்பு நவநாள் நடைபெற்றது. 22.01.1998 அன்று மேதகு ஆயர் எம். அம்புரோஸ், D.D.D.C.L., அவர்கள் தலைமையில் நன்றித் தேர்த்திருவிழா சிறப்பிக்கப்பட்டது.
14.01.1998 அன்று முதல் வருடந்தோறும் வேண்டுதல் பொங்கல் வைக்கும் விழா துவங்கியது. அருட்தந்தை சைமன் பீட்டர் இத்தருத்தல வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார்.
மேதகு ஆயர் எம். அம்புரோஸ் D.D.D.C.L., அவர்கள் புலியூர் திருத்தலத்தை கரூர் பங்கோடு இணைத்தார்கள். 28.08.2002-ம் ஆண்டு மேதகு ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ் M.A.,D.C.L,, கோவை ஆயராக பொறுப் பேற்றார்கள். அவர்கள் 13.10.2002-ல் திருத்தலத்திற்கு வருகை | தந்தபோது புதிய ஆலயம் கட்டவேண்டும் என்ற விண்ணப்பம் எழுந்தது. ஆயர் அவர்கள் மேலும் 44 செண்ட் நிலம் வாங்கவும், புதிய ஆலயம் கட்டவும் அனுமதி தந்தார்கள்.
17.07.2003-ம் தேதி அற்புத குழந்தை இயேசுவுக்கு புதிய ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் தலைமை பொது மேலாளர் திரு. சுதாகர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அருட்தந்தையர்கள் லூர்து இருதயராஜ், அருட்தந்தை ரோச் அவர்கள் சிறப்போடு பணியை செய்தார்கள். புதிய ஆலயப்பணி நடைபெற்றபோது உதவிப் பங்குத் தந்தையர்களாக இருந்த அருட்தந்தை. மரியசூசை, அருட்தந்தை சுதாகர், அருட்பணி. ஆல்பர்ட் அயராது புதிய ஆலயப் பணிகளுக்காக பாடுபட்டார்கள். புதிய ஆலயம் கரூர், பசுபதிபாளையம், புலியூர் பங்கு மக்களின் அன்பான உதவிகளினாலும், எண்ணற்ற பக்தர்களின் நன்கொடை களினாலும், மறை மாவட்டத்தின் உதவியாலும் கட்டி முடிக்கப்பட்டு 18.01.2007-ம் ஆண்டு கோவை மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை குருசாமி அடிகளாரால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
21.01.2007-ம் தேதியன்று மேதகு ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ் M.A., D.C.L., அவர்கள் திருத்தலத்தின் பீடத்தை புனிதப் படுத்தி திருப்பலி நிறைவேற்றினார். அதன் பிறகு நடைபெற்ற பாராட்டு விழாவில் இதை தனிப் பங்காக உயர்த்த வேண்டுகோள் விடப்பட்டது.
புதிய ஆலயத்திற்குரிய மிகப்பெரிய பொறுப்பையும். பணிகளையும் அருட்திரு. லூர்து இருதயராஜ் அடிகளாரும். அருட்திரு. பால் அடிகளாரும் மிகச் சிறப்பாகச் செய்தார்கள். புதிய ஆலயத்திற்காக இவர்கள் உழைத்த உழைப்பு, மேற்கொண்ட தியாகங்கள், செபித்த செபங்கள் வீண்போகாமல் அற்புத குழந்தை இயேசுவின் மகிமை அனேகமக்களுக்கு கிடைத்தது.
10.6.2007 - தேதியில் இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவன்று இது தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத் தந்தையாக அருட்பணி. இ. ஜாய் ஜெயசீலன் பணிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.
24.5.2012 - புதுப்பிக்கப்பட்ட அன்னையின் கெபி, அருட்தந்தை இ.சைமன் பீட்டர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
மத, சபை பேதமின்றி ஒவ்வொரு நாளும் மக்கள் வந்து அற்புத குழந்தை இயேசுவின் அருள் பெற்றுச் செல்கிறார்கள்.
2012-ஆம் ஆண்டு அருட்தந்தை. மாிய அந்தோனி பால் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர்கள் 2016-ஆம் ஆண்டு புதிய கொடிமரத்தினை அழகுற வடிவமைத்தார். 2017-ஆம் ஆண்டு அருட்தந்தை. ஸ்டீபன் ஆரோக்கிய ராஜ் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். 2018-ஆம் ஆண்டு அருட்தந்தை. அந்தோனி ஞானப்பிரகாசம் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுப் பணியாற்றிக்கொண்டியிருக்கிறார். 2020-ஆம் ஆண்டு திருத்தலப் பெருவிழாவின் போது நமது கோவை ஆயர். தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகையால் குழந்தைகளுக்கு உறுதிப் பூசுதல் அருட்சாதனம் வழங்கப்பட்டது.
Information
243, Teachers Colony,
Puliyur - Karur Dt.,
639 114




