My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Palayamkottai > Nellai Town > St. Adikala Matha Church

St. Adikala Matha Church

Palayamkottai Diocese • Tamil Nadu, India

Church History

வீரமாமுனிவர் காமநாயக்கன்பட்டியிலிருந்து நெல்லை வழியாக ஆண்டிபட்டி செல்லும் போது, தற்போது தூய அடைக்கல அன்னை ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் வந்து சென்றதன் நினைவாக நெல்லை நகர் சாலியர் தெருவில் கடந்த 1787-ஆம் ஆண்டு தூய அடைக்கல அன்னை ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த தனம் தம்பதியரின் குடும்ப ஆலயமாக இருந்தது. பேட்டை பங்குத்தந்தையின் முயற்சியினால் அந்தக் குடும்பத்தார் பாளை மறை மாவட்டத்திற்கு நன்கொடையாக கொடுத்தனர்.1982-ல் பேட்டை பங்கோடு இணைக்கப்பட்டு நெல்லை நகர் அடைக்கல மாதா ஆலயம் இறைமக்கள் வழிபடும் புனிதத் தலமாக பழைய கோயிலில் திருப்பணி நடைபெற்றது. அப்போது இப்பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்தனர். அவர்கள் 1985-ஆம் ஆண்டு மேதகு ஆயர் இருதயராஜ் அவர்களிடம் தூய அடைக்கல அன்னை ஆலயம் இருக்குமிடத்தில் எங்களுக்கு புதிய ஆலயம் கட்டித்தர கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று 27.12.1987ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு ஆயர் திருக்கரத்தால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 1995-ல் ஆலயத்தின் முன்பகுதியை மாதாவின் அற்புத கெபியால் அலங்கரிக்கப்பட்டது. ஆலயத்தின் முன்பகுதியில் கொடிமரம் ஒன்று நிறுவப்பட்டது. 2005-ஆம் ஆண்டு பேட்டை பங்கிலிந்து தூய அடைக்கல அன்னை ஆலயம் நெல்லை நகர் புதிய பங்காக உருவாக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு சிற்றாலயத்தின் 225-ஆம் ஆண்டு நினைவு விழாவும், புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தின் 25-ஆம் ஆண்டு நினைவு விழாவும் பங்குத் திருவிழாவோடு கொண்டாடப்பட்டது. தூய அடைக்கல அன்னையின் அற்புதங்களைக் கண்டு சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் இங்கு வந்து அன்னையின் ஆசி பெற்று செல்வது இத்தலத்தின் சிறப்பு. Substation With Churches: Karuppandurai Vellalankulam Kandiyaperi Sebastiarpuram Lalugapuram Abishekapatty Substation Without Churches Gandhinagar Seethaparpanallur The Succession of the Priests 1. Rev. Fr. Antony Xavier 2. Rev. Fr. Arul Ambrose, 3. Rev. Fr. Antony A. Cruz

Information

Adaikala Matha Church St., Tirunelveli Town - Tamil Nadu 627 006 - India

Church Photos

Diocese
Palayamkottai
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.