My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Thanjavur > Palayamkottai > Our Lady Of Holy Rosary Church

Our Lady Of Holy Rosary Church

Thanjavur Diocese • Tamil Nadu, India

Church History

சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை பகுதியானது செஞ்சி அரசின் கீழ் இருந்தது. இது சிதம்பரத்திலிருந்து 25கிமீ தொலைவில் உள்ளது. புனித அருளானந்தர் தனது பணித் தலத்தைப் பாளையங்கோட்டை அருகே உள்ள கொழை என்ற ஊரில் அமைத்துப் பணியாற்றினார். இங்குள்ள பல்வேறு மக்களைக் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றச் செய்தார். 1904ஆம் ஆண்டு முதல் தனிப் பங்காகச் செயல்படும் பாளையங்கோட்டை, ஆரம்பக் காலத்தில் சென்னை, பாண்டிச்சேரி, கும்பகோணம் போன்ற மறைமாவட்டஙகளின் கீழ் செயல்பட்டு வந்தது. தற்போது தஞ்சை மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சுமார் 35கிராமங்களை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னர் அறந்தாங்கி, வாலீஸ்பேட்டை, ஸ்ரீபுத்தூர், தண்டேஸ்வரநல்லூர் போன்ற பங்குகள் உருவானது, பாளையங்கோட்டை பங்கின் நூற்றாண்டு விழா 2004 ஆண்டு தஞ்சை மறைமாவட்டம் ஆயர் எம் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் மறைமாவட்ட குருக்கள் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தஞ்சை மறைமாவட்டம் ஆயர் எம் தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகை அவர்கள் தனது திருத்தொண்டர் பணியைப் பாளையங்கோட்டை பங்கில் ஆற்றினார். மிகப் பழைய பங்கான பாளையங்கோட்டை பங்கு 2010அன்று மறைவட்டமாக உயர்த்தப்பட்டது. கிறிஸ்துமஸ், நற்கருணைப் பெருவிழா இப்பங்கில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் உயிர்ப்புப் பெருவிழா அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக இணைந்து, ஆடம்பரத் தேர்ப்பவனி நடத்துவர். இங்குச் சுமார் 30 குருக்கள் பணியாற்றி உள்ளனர். தற்போதைய பங்குத் தந்தையாக அருட்திரு வி. பிரான்சிஸ் அடிகள், மறைமாவட்ட அதிபராகவும்; உதவிப்பங்குத்தந்தையாக அருட்திரு ஏ.ராயல் பிரிட்டோ அவர்களும் பணியாற்றுகிறார்கள். பாளையங்கோட்டை பகுதியில் மட்டும் 3500 கிறிஸ்தவ மக்கள் உள்ளனர் என்பது சிறப்பு. பங்கில் மொத்தம் 6000-க்கும் மேல் கிறிஸ்தவ மக்கள் உள்ளனர். தூய செபமாலை அன்னையின் வழியாகப் பல்வேறு புதுமைகள் இப்பங்கில் நிகழ்கின்றன.

Information

Palayamkottai S.O., Kattumannarkoil Tk. Cuddalore Dt. Tamil Nadu 608 701 - India

Church Photos

Diocese
Thanjavur
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.