St. Michael’s Church
Church History
வளர்ந்து வரும் கல்வி நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் உள்ளடக்கிய அழகாபுரம் பகுதியில் குடியேறும் இறைமக்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வந்ததால் சூரமங்கலம், அரிசிப்பாளையம் மற்றும் ஜான்சன்பேட்டை ஆகிய பங்கைச் சார்ந்த பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு, புதிதாக அழகாபுரம் பங்கு 27.05.1997 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி ஆண்டகை அவர்களால் உருவாக்கப் பட்டது.
இவ்வாலயக் கட்டுமான முயற்சிகளை மேதகு ஆயர் அவர்களின் உதவியுடன் பாதி அளவில் கட்டப்பட்டது. பிறகு, பங்கின் முதல் பங்குத்தந்தையாகப் பணிப் பொறுப்பேற்ற அருட்பணி. பிலவேந்திரம் அவர்களின் முயற்சியாலும், மக்களின் நன்கொடைகளாலும் மீதியிருந்த கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்று, 07.07.1997 அன்று ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
மேலும், அருட்பணி. பிலவேந்திரம் அவர்களின் முயற்சியால் ஆலய மணிக்கோபுரமும், பங்குத்தந்தை இல்லமும் கட்டப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. M. அல்போன்ஸ் அவர்கள் பங்கை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.
அருட்பணி. சார்லஸ் (2007-2012) அவர்களின் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தில் தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும், ஆலயத்தைச் சுற்றிலும் கல்தளம் (தரைப்பகுதி) அமைக்கப்பட்டது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் புனித அன்னை தெரசா, புனித பிரான்சிஸ் அசிசியார், புனித அந்தோணியார், புனித சூசையப்பர் ஆகிய புனிதர்களின் சுரூபங்கள் தாங்கிய அழகிய கெபிகள் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. சிறப்பாக, கல்லறைத்தோட்டம் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டது.
அருட்பணி. கிறிஸ்துராஜ் (2012-2018) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டுச் சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. மேலும் "புனித மிக்கேல் மறைக்கல்வி மன்றம்" கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. சாலமோன் ராஜ் அவர்களின் முயற்சியால் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று மாலை 06:15 மணிக்கு இயேசுவின் திருக்காயங்களின் பக்தி முயற்சி தொடங்கப்பட்டு, சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், மறைமாவட்டத்தில் மூன்றாவது நற்கருணை ஆராதனை ஆலயமாக இங்குப் பங்குத்தந்தை மற்றும் நன்கொடையாளர்களின் முயற்சியால் "நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம்" கட்டப்பட்டு வருகிறது.
பங்கில் பணியாற்றிய பங்குப்பணியாளர்கள்:
1. அருட்பணி. பிலவேந்திரம் (1997-2003)
2. அருட்பணி. அல்போன்ஸ். M (2003-2007)
3. அருட்பணி. சார்லஸ் (2007-2012)
4. அருட்பணி. கிறிஸ்து ராஜ் (2012-2018)
5. அருட்பணி. சாலமோன் ராஜ் (2018 - till date)
Information
Convent Road,
Alagapuram B.O - Salem Dt.
Tamil Nadu - 636 016 - India




