St. Anne’s Church
Church History
Thattarmadam was one of the prominent substations of Sokkankudiyiruppu parish. Rev. Fr. Peter Raja had a special concern for the people of Thattarmadam and after his retirement he lived at Thattarmadam and took care of the spiritual needs of the people. Eventually Thattarmadam was made into a separate parish on 3rd January 2002 and Rev. Fr. Peter Rajah was appointed as the first parish priest of Thattarmadam. Rev. Fr. G. Joseph built presbytery which was blessed by Bishop Yvon Ambroise on 22nd May 2010.
Sub – Stations
1. Thandayarpuram – St. Antony
Participatory Structures
1. Anbiyams
2. 15 Pastoral Commissions
3. Parish Pastoral Council
4. Parish Finance Committee
Christian Life Societies (Pious Associations)
1. Holy Childhood
2. Holy Family Sodality
3. Matha Sodality
Succession of parish priests:
1. Rev.Fr. Peter Raja 2002 - 2007
2. Rev.Fr. Joseph G. 2007 - 2012
3. Rev.Fr. John Paul Lobo 2012 - 2013
4. Rev.Fr. Rathinaraj 2013 - 2018
5. Rev.Fr. Santhiyago R. 2018 - 2020
6. Rev.Fr. Joseph Stalin 2020 -
தட்டார்மடம் ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாகத் தெரிகிறது. ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட போது, அவரைப் பொற்கொல்லர் தொழில் செய்யும் வைத்தியர் ஒருவர் குணமாக்கினார் என்றும், அதற்கு நன்றியாகப் பொற்கொல்லர் (தட்டார்) சமுதாயமக்களுக்கு அவர்கள் குடியிருந்த பகுதியையும், நன்செய், புன்செய் நிலங்களையும் தானமாகக் கொடுத்தாகவும், மடம் ஒன்று கட்ட அனுமதி வழங்கியதாகவும் அது ‘தட்டார்மடம்’ என்று அழைக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்தியாக உள்ளது.
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் தென்பகுதி, சாத்தான்குளம் மறைவட்டத்தின் பங்குதளங்களின் எளிமையான மக்களைக் கருத்தாய்க் கொண்ட பங்கு தட்டார்மடம். அன்னை மரியாவின் தாயான புனித அன்னம்மாளை பாதுகாவலியாகக் கொண்டு, மக்கள் மனதில் "சந்தன மாதா" என்று அருள்பாலித்து வருகிறாள். தட்டார்மடத்தில் சிறு சிறு குழுக்களாக சமூக உணர்வுடன் இருந்தாலும், பழக்கவழக்கங்களிலும் சிந்தனைகளிலும் வேறுபாடு அவ்வளவு வெளிப்படையாகத் தெரியவில்லை.
நாடார், தேவர், பிள்ளை, ஆசாரி, யாதவர், செட்டியார், ஆதிதிராவிடர், அருந்ததியர், குருக்கள், சவரத்தொழிலாளர், சலவைத் தொழிலாளர் எனப் பல சமூகத்தினரும் தட்டார்மடத்தில் இதுவரை ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அன்றே தட்டார்மடம் ஒரு ‘சமத்துவ புரமாக’ திகழ்ந்துள்ளது. தட்டார்மடத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்கள் கி.பி. 1926க்கு முன் மூக்குப்பீறி அருகிலுள்ள பிரகாசபுரத்திலிருந்து குடியேறினர். அவர்கள் பனைத்தொழில் மற்றும் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டு தங்கள் இருப்பிடத்தை உறுதிசெய்தனர். கி.பி. 1944ல் சொக்கன்குடியிருப்பு பங்குப் பணித்தளத்தில் இருந்த 18 ஊர்களில் தட்டார்மடமும் ஒன்றாகும். தட்டார்மடத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வாழும் பகுதியை வடக்கூர் என்று இதர மக்கள் அழைத்தனர். வடக்கூர் மேற்குதெரு, கிழக்குத் தெரு, கம்மாளன் விளை, குருசடித் தெரு என்ற நான்கு பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
தொடக்கத்தில் தட்டார்மடத்தில் வழிபடுவதற்கு வதற்கு ஆலயம் கிடையாது. சொக்கன்குடியிருப்பு ஆலயம் சென்றுதான் வழிபட்டு வந்துள்ளனர். பின்பு, ஓலையால் ஆலயம் ஒன்றை இப்பொழுது ஆலயம் இருக்கும் இடத்தில் அமைத்தனர். இவ்வேளையில் ஊர் நிர்வாகியாக இருந்தவரின் கனவில் தட்டார்மடத்தில் வசித்துவந்த ஒரு பெண்ணின் பெயரைக் (சந்தனம்) கூறி, அப்பெயரையே கோவிலுக்கு வைக்குமாறு சொல்லப்பட்டதாகச் செய்தி. ஆதலால் தான், மரியாளைப் பெற்றெடுத்த“சாங்தாஅன்னா” என்ற“புனிதஅன்னாள்” பெயரைக் கோவிலுக்கு வைத்துள்ளனர். ஆண்டுக்குக்கு நான்கு முறை, சைவம், பால்-பழம், மீன், ஆடு எனும் நான்கு வகையில் அசனம் வழங்கியுள்ளனர். அசனம் நடத்தி வந்த “அசனப்பறை” இப்போது புனித அந்தோணியார் கெபியாக உயர்ந்துள்ளது.
ஊர் தோன்றிய காலமுதலே இறந்தவர்கள் உடலை இப்பொழுது அடக்கம் செய்யும் (தேவசகாயம் பிள்ளை குருசடி முன்புற இடது) இடத்திலே அடக்கம் செய்துள்ளனர். அந்த இடத்தினை மேலத்தெருவில் குடியிருந்த அலசி என்பவர் விலைக்கு வாங்கியதாகத் தெரிகிறது. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் சிற்றாலயம், பிற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தைச் சுற்றி முதலில் ஓரிரு குடும்பங்களே குடியேறியுள்ளன. பின்னர் நிறைய குடும்பங்கள் குடியேறிதாகத் தெரிகிறது. கிறிஸ்து பிறப்பு விழா, உயிர்ப்பு விழாக்களின் முந்தின நாள் இரவு வடக்கூர் மக்கள் பவனியாக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் சிற்றாலயத்திற்குச் சென்று, மன்றாடிய பின்தான் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றுவந்துள்ளது. இன்றும் அப்பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஓலைக் கோவிலை மண்சுவர் எழுப்பி, ஓட்டுக் கூரையாக மாற்றியுள்ளனர். ஆண்டுதோறும் ஜுலை 26-ஆம் நாள் கொண்டாடப்பட வேண்டிய புனித அன்னாள் திருவிழா, பனையேறும் தொழிலை முதன்மையான தொழிலாக மக்கள் கொண்டிருந்ததால், ஜனவரி முதல் வாரத்தில் வருகின்ற ஞாயிறு அன்று பங்கு மற்றும் ஊர் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
1948-இல்; களிமண் கோவில் உடைக்கப்பட்டு, கற்கோவில் கட்டுவதற்கு அருள்தந்தை. இஞ்ஞாசியாரால் அடிக்கல் நடப்பட்டது. நிலத்தகராறு காரணமாக கட்டடப் பணி தாமதப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், அருள்தந்தை. மரியதாஸ் காலத்தில் ஆலயப்பணி தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டது. மேதகு ஆயர். அம்புரோஸ் மதலைமுத்து அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கபட்டது. ஆலயப்பீடமும் புனிதப்படுத்தப்பட்டது. 03.01.2002 அன்று மேதகு ஆயர். பீட்டர் பர்ணான்டோ அவர்களால் தட்டார்மடம் (அன்னாள் நகர்) புதிய பங்காக அறிவிக்கப்பட்டது. புதிய பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருள்தந்தை. பீற்றர்ராஜா பொறுப்பேற்றார். அன்னாரது பெரு முயற்சியால் கோவில் மண்டபம் கட்டப்பட்டது. புனித அன்னாள் நடுநிலைப்பள்ளி, புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அருள்தந்தை.ஜோசப் அவர்கள் ஆலய பீடம், புதியகொடிமரம், ஆரோக்கிய அன்னைகெபி, அருள்பணியாளர் இல்லம் எனப் பல பரிமாணங்களில் தனது பணியைத் தொடர்ந்தார். அருள்தந்தை. ஜாண்பால் லோபோ மக்களை இசை வழியில் இறைவனை நோக்கி நடத்தினார். அருள்தந்தை. ஜோசப் இரத்தினராஜ் அவர்கள் ஊர் பெரியவர்களுடன் இணைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்த தொடக்கப்பள்ளியை புதிய பொலிவுடன் கட்டினார்.
இப்பங்கில் சுமார் 127 குடும்பங்கள் உள்ளுரிலும் ஏறக்குறைய 56 குடும்பங்கள் வெளியூரிலும் வாழ்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்கும் தளமாக திருவிழாக்கள் அமைந்துள்ளது என்பது சிறப்புக்குரியது. 5 தெருக்களைக் கொண்ட பங்கு. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் (முருங்கை, பனை) மற்றும் தோட்டத்தை (தென்னை, மா) மையமாகக் கொண்டது. இருந்த போதிலும் மக்களின் அயராத உழைப்பால் சிலர் ஆசிரியராகவும் அரசுத்துறையிலும் மற்றும் சுயதொழிலிலும் சிறந்த விளங்குகிறார்கள். மக்களின் கல்வி வளர்ச்சிப் பணியில் புனித அன்னம்மாள் ஆரம்பப்பள்ளி மற்றும் புனித அன்னம்மாள் உயர்நிலைப்பள்ளிகளின் பங்கு சொல்லில் அடங்காதவை.
மே 2018 - மே 2020
தட்டார்மடத்தின் 5வது பங்குத்தந்தையாக அருள்தந்தை சந்தியாகு 26.05.2018 சனிக்கிழமை அன்று மாலை 3மணியளவில் அருள்தந்தை. அந்தோணி ஜெகதீசன் (பங்குத்தந்தை, கூடுதழை) தலைமையிலும் அருள்தந்தை. சூ. ம. சகாயம் (மணவை மறைவட்ட முதன்மைகுரு, உடன்குடி), தட்டார்மடம் முன்னாள் பங்குத்தந்தை அருள்தந்தை. ஜோசப் இரத்தினராஜ் முன்னிலையில் பொறுப்பேற்றார். ஓரிரு நாட்களில் பங்கின் சபைப் பொறுப்பாளர்கள,; அன்பியப் பொறுப்பாளர்களை வரவழைத்து, பங்கின் நடைமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் கேட்டறிந்து, பழைய மன்றாட்டுக்களுக்குப் பதிலாக புதிய புதியமன்;றாட்களும், ஞாயிறு திருப்பலி முன்னுரை, மன்றாட்டுகள் அந்தந்த வார வாசகங்களைச் சார்ந்திருக்குமாறு எழுதி, தந்தையிடம் புதன்கிழமைக்குள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இரண்டு வாரங்கள் கழித்து, திருக்குடும்ப சபை உறுப்பினர்கள் உதவியுடன் பங்குத்தந்தை ஒவ்வொரு வீடாகச் சந்தித்து, மக்களின் நிலைப்பற்றி அறிந்துக்கொண்டு, அதனை தன்னுடைய வருங்கால நினைவுக்காக ஏட்டில் குறிப்பெழுதிக் கொண்டார். இந்நிகழ்வு மக்கள் தங்களுடைய வீட்டை ஓரளவிற்கு தூய்மை செய்வதற்கு உதவியது என்பது திருக்குடும்ப சபையாரின் கருத்தாக இருந்தது. நாளடவில் அன்பியக்கூட்டங்கள் தந்தையோடு இணைந்து பங்குமக்களும் சேர்ந்து நடத்தப்பட்டன.
சிறுவயதிலேயே பக்தியும், படிப்பும் சேர்ந்து வளர வேண்டும் என்பதற்காக, பள்ளியில் படிக்கும் அனைத்துப் பிள்ளைகளின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டு, குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான கருத்துக்கள், உணவுப்பழக்கங்கள், தெய்வ பக்தியில் குழந்தைகள் சிறக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதோடு மட்டுமல்லாது பிள்ளைகள் அதுவும் குறிப்பாகப் பெண்பிள்ளைகள் பாலியல் பற்றித் தெறிந்துக் கொள்வது, காலத்தின் கட்டாயம் என்பதை அறிந்து, தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பொதுநிலையினர் பணியகத்தின் உதவியுடன், 12.06.2018 புதன் அன்று, மாணவ மாணவிகளுக்கு புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியில் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன.
ஆலய உதவியாளர் இல்லாத ஒரு சூழல் நிலவியது. தினந்தோறும் பங்குத்தந்தையே ஆலயத்தில் பாட்டு ஒலிபரப்பு செய்வது மற்றும் திருப்பலிக்கு தேவையான பொருட்களை எடுத்து தயார் செய்வதுமாக நாட்கள் சென்றன. மக்களின் சிந்தனையில் ஏறாத செய்தியாக இந்நிகழ்வு இருந்து வந்தது. கோவிலில் பலிபீடச் சிறுவர்களை உருவாக்கியதன் மூலம் இப்பழக்கத்திற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே முதல் முதலில் பெண்குழந்தைகள் பீடப்பூக்களாக பணிசெய்ய வைத்தது சிறப்பிற்குரியது. திருச்சபை பெண்ணிய திருச்சபையாக இருந்தாலும், அப்பெண்களுக்கு எதிர்ப்பே ஆண்ணாதிக்க சிந்தனைக் கொண்ட பெண்களே என்பது நிதர்சன உண்மை. அதுவும் பெண்குழந்தைகள் பீடப்பூக்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. பங்குத்தந்தையிடம் பெண் பிள்ளைகள் தீட்டு என்று சிலர் முறையிட்டாhகள். பெண்கள் தீட்டு என்றால், இயேசுவும் பெண்ணிடமிருந்து வந்தவர்தான் - எனில் அவரும் தீட்டு: இரத்தப்போக்கு பெண் இயேசுவின் ஆடைத் தொட்டு குணமானாள். அது போன்று தீட்டு என்று சொல்லப்படுகின்ற பெண்கள் பீடத்தில் வரும்போது, இயேசுவைத் தொடும் போது அவர்கள் புனிதம் அடைவார்கள் என்று பங்குத்தந்தை ஞாயிறு அறிவிப்பில் பதிலளித்தார்.
அன்பியங்கள் உயிரோட்டத்துடன் செயல்பட 16.09.2018 அன்பியச் சந்திப்பு தூத்துக்குடி பணியகத்தின் வழியாக உற்சாகப்படுத்தியது சிறப்புக்குரியது. உண்மையிலே மக்கள் அன்பியங்கள் செயல்பாட்டை உணர்ந்ததை, தங்களின் தெருக்களை தூய்மை செய்வதிலும், நோயாளர்களைச் சந்திப்பதிலும், ஆலயத்தைத் தூய்மை செய்வதிலும் பார்க்கமுடிந்தது.
செப்டம்பர் மாதம் ஆரோக்கிய அன்னை கெபி திருவிழா கொண்டாட இருந்ததால், ஊர் நிர்வாகத்தினர் அதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். வழக்கமாக பங்குத்தந்தை ஊர் கூட்டங்களில் கலந்துக்கொள்வதில்லை. இக்கூட்டத்தில் பேசிய சில முடிவுகளை பங்குத்தந்தையின் பார்வைக்கு கொண்டு வந்தனர். அதில் முக்கியமாக கோவிலில் மேல்தளம் அமைக்கவேண்டும் என்பது அழுத்தமான முறையில் முன்வைக்கப்பட்டது. செப்டம்பர் திருவிழா முடிந்தவுடன் அன்பிய பொறுப்பாளர்கள், பல சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் நிர்வாகத்தினர் முன்னிலையில் ஆலய ஒலி மற்றும் ஒளி சீரமைப்புப் பணி பற்றி பேசப்பட்டது. கோவில் மேல்தளப்பணி சீரமைப்பு ஓரிரு ஆண்டுகள் கழித்து முடிவெடுக்கலாம் என்று பங்குத்தந்தை அவர்களால் மொழியப்பட்டது. மக்களின் பேராதவுடனும் நன்கொடைகள் மூலம் ஏறக்குறை 3 இலட்சத்திற்கு ஒலி மற்றும் ஒளி சீரமைப்புப் பணி நடைபெற்றது. அதற்கான வரவு செலவு பற்றி பங்குத்தந்தை மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தது சிறப்புக்குரியது.
மக்கள் பொருளாதாரத்தில் சிறிது பின் தங்கியிருந்தாலும், திருஅவைக்காக கொடுப்பத்தில் நிறைந்த உள்ளத்தினாராக விளங்கினர். நற்செய்தி அறிவிப்பு ஞாயிறுக்கு ரூபாய் 39,000 கொடுத்ததில் அது தௌ;ள தெளிவாகத் தெரிந்தது. அதே சமயத்தில் பசி பிணிக்காக ரூபாய் 55,000 கொடுத்தது அதை விடச் சிறப்புக்குரியதாக இருந்தது. பங்கின் பாராமரிப்புகாகவும், பங்கு நிர்வாகத்திற்காகவும் புதிய குடும்பக் கையேடு மற்றும் அதற்கு ஆண்டுச் சந்தா ரூபாய் 300 தந்து உதவியது உண்மையில் அவர்கள் உள்ளம் கொடுப்பதில் உயர்ந்தது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.
உறுதிபூசுதல் என்னும் அருட்சாதனம் கொடுக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தனால், பங்குத்தந்தை இரு முறையாக 15நாள்கள் வகுப்புகள் மூலம் சுமார் 49 மாணவ மாணவிகளுக்கு பயிற்சிக் கொடுத்து தயார்படுத்தினார். புனித அன்னம்மாள் 8ம் திருவிழா அன்று கடந்த இரு ஆண்டுகளும் நற்கருணை பவனி பிரகாரம் பங்குத்தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க வரிசையாகவும், இடைச்செருகலின்றியும், அமைதியாகவும் பக்தியோடும் செப உணர்வோடும் நடைபெற்றது அருமை. மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்கள் தலைமையில் 06.01.2019 ஞாயிறு அன்று அமலோற்பவ மாதா சபையினர் ஆரத்தி எடுக்க, வெகு சிறப்பாக திருவிழா திருப்பலி, உறுதிபூசுதல் மற்றும் நற்கருணை திருவருட்சாதனங்கள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. உறுதிபூசுதல் மற்றும் நற்கருணை திருவருட்சாதனங்கள் மேதகு ஆயர் கையெப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டது.
2019 ஜனவரில் திருவிழா முடிந்தவுடன் காலை 11மணிக்கு வழக்கத்துக்கு மாறாக ஊர் கூட்டத்திற்கு பங்குத்தந்தை நிர்வாகத்தினாரால் வழிநடத்த அழைக்கப்பட்டார். ஆலய மேல்தளம் சீரமைக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் பங்குத்தந்தை அவர்கள் ஊருக்கு அடிப்படைத் தேவையான கல்லறை வாங்குவது பற்றி எடுத்துரைத்தார். பங்குத்தந்தையின் கருத்துக்கு மாற்றுக்கருத்து வந்தபோதிலும், இறுதியாக கல்லறைக்காக புதிய இடம் வாங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, ரூபாய் 3000 வரி வசூல் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கல்லறைக்கு விடிவு பிறக்கும் என்று நம்பினாலும், காலம் அதனை கிடப்பில் போட்டது என்பது தட்டார்மடத்தின் தொன்றுதொட்டு வரலாறாக நின்றது. அதே சமயத்தில் ஆலய சீரமைப்புப் பணிக்கு ஒவ்வொரு வீடாக பங்குமக்களிடம் பணம் பெற பங்குத்தந்தைக்கு விரும்பம் இல்லை. ஆனால் புதிய நிலம் வாங்கி, புதிய ஆலயம் கட்டுவதற்கு உடன்பட்டிருந்தார்.
2019 மற்றும் 2020 டிசம்பர் கிறிஸ்துமஸ் விழாவில் குழந்தைகள் வானதூதர்கள் போல எக்காளம் ஊதி, தூபம் மற்றும் தீப ஒளி ஏந்தி குழந்தை இயேசுவை ஆராதிக்க வந்தது வெகுச்சிறப்பு. நள்ளிரவு திருப்பலிக்குப்பின் குழந்தைகள் கலைநிகழ்ச்சியும், புத்தாண்டு திருப்பலிக்குப்பின் நடந்த நிகழ்ச்சிகளும் ஆண்டு முழுவதும் இறைவனின் ஆசீர்வாதத்தை மனதில் உணரச் செய்த தருணமாக அமைந்தது.
கல்வியில் பின்தங்கியப் பெற்றோர்களாக இருப்பதால், பிள்ளைகள் வீட்டுப்பாடம் படிக்க மாலை நேரப்படிப்பு தொடங்கப்பட்டது. ஆங்கிலப் புலமை பெற ளுஅயசவ ஊடயளள ஆரம்பிக்கப்பட்டது. இசையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இசைவகுப்பு என குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொணர்ந்து, அவர்களின் வாழ்க்கைக் தரத்தை உயர்த்த பங்குத்தந்தை ஆற்றியப்பணி பெருஞ்சிறப்பிற்குரியது. இரு பள்ளிகளுக்கும் சீருடை மாற்றம் ஆசிரியர் மற்றும் பெற்றோர் கலந்தாலோசனை மூலம் வடிவமைக்கப்பட்டது, பள்ளி மாணவர்களைக் கண்டு மற்றவர் வியக்கும் வண்ணம் எடுத்துக்காட்டாக பள்ளி வளர்ந்தது. மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்களின் உதவியால் குழந்தைகள் தின விழா 14.09.2019 அன்று, மாலை கலைநிகழ்வில், மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டியது இதுவே முதல் முறை. இரு பள்ளிகளும் இணைந்து சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா கொண்டாடியது ஊர்மக்களும் கலந்து கொண்டது வெகுசிறப்பு.
காலம் தொடந்து செல்லும் போது, வழிபாட்டு நிகழ்வுகளிலும் அன்பிய நிகழ்வுகளிலும் தளர்ச்சி மக்களில் ஏற்படுவது இயல்பு. மக்களின் தளர்ச்சி என்னும் பாலைவன நிகழ்வுகளை பொதுநிலையினர் பணியகத்தின் வழியாகவும், செப ஒருங்கிணைப்பு மற்றும் நற்செய்தி அறிவிப்பு வழியாகவும் இறைவனின் வழியில் மக்களை நிறுத்தியது அற்புதமானது.
மறைக்கல்வியில் மாணவ மாணவிகள் சிறப்பான விவிலிய அறிவு பெற, பெண் இறைவாக்கினர்கள் மற்றும் விவிலிய வரலாற்றுப் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. மேலும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாகவும் மற்றும் விவிலியத்தில் ஆர்வமுள்ளவர்களாக வளர வேண்டும் என்பதற்காகவும், 06.10.2019 அன்று மாணவர்கள் ஆசிரியர்கள் முயற்சியில் விவிலிய கண்காட்சி தட்டார்மடத்தில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் உற்சாகமூட்டும் நிகழ்வு குறைவாகவே காணப்பட்டது என்பது பிள்ளைகளின் குறையாக இருந்தது. மக்கள் விவிலிய அறிவில் வேருன்ற வேண்டும் என்பதற்கு 2019 செப்படம்பரில் விவிலிய வினாடி வினாப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி, மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. அதோடுமட்டுமல்லாது மாதத்திற்கு ஒவ்வொரு விவிலிய நூலை படித்து வரச் செய்து, மாதத்தின் கடைசி சனி, ஞாயிறு நாட்களில் ஒரு குழுவிற்கு 6பேர் என்ற முறையில் விவிலிய வினாடி வினா போட்டி நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றனர்.
மறைக்கல்வியில் சரியான முறையில் பங்குகொள்ளாத குழந்தைகளுக்கு, நற்கருணை அருட்சாதனத்தை காலதாமதம் செய்ததும், ஆலய வழிபாட்டில் பங்கெடுக்காத மக்கள் மீது பங்குத்தந்தை கோபத்தை வெளிக்காட்டியதும், அவர் மீது வைக்கப்பட்ட புகராக இருந்து வந்தது.
ஓரே பங்குதளம் என்று இருப்பதனால் பங்குத்தந்தை அவர்கள் இரு முறை ஆயர் பார்வைக்கு, சொக்கன்குடியிருப்பு பங்குதளத்தின் இணையூரான சின்னராணிபுரம் மற்றும் கொம்மடிக்கோட்டையை தட்டார்மடம் பங்குதளத்தோடு இணைக்குமாறு விண்ணப்பித்தார். அதற்கு எந்த பதிலும் மறைமாவட்டதிலிருந்து கொடுக்கப்படவில்லை.
தமிழர் திருநாளாகிய பொங்கல் திருவிழா, பிற சமய திருவிழாவாக பார்க்கப்பட்ட சூழல் நிலவியது. 2019ஆண்டு, சில அன்பிய மற்றும் பக்த சபையினர் உதவியால், திருப்பலிக்கு முன் பொங்கல் இடப்பட்டது விமர்சனத்திற்கு உட்பட்டது. இருந்தபோதிலும் பல இடர்பாடுகளுக்கு பின்பும், 2020 ஆண்டு பொங்கல் திருவிழா அதிகாலையில் அனைத்து சபைகளும் தனித்தனியாக பொங்கலிட்டு, அதைத் தொடர்ந்து திருப்பலி, திருப்பலி முடிந்ததும் பொங்கல் சாப்பிட்டு, பின்னர் விளையாட்டு போட்டிகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை கலந்து கொள்ளச் செய்தது மிகவும் சிறப்பு. மாலை கோலப்போட்டி மறுநாள் பேச்சுப்போட்டி, நடனப் போட்டி, பாட்டுப் போட்டி என பொங்கல் விடுமுறை பிற சமயத்தினர் ஆச்சரியப்படக்கூடிய வகையில் வெகு விமரிசையுடன் கொண்டப்பட்டது. பெண்களின் பங்கேற்பு அதிக அளவில் காணப்பட்டது.
கொரோனா என்ற கொள்ளை நோய் காலகட்டத்தில், பங்குத்தந்தை, மண்ணின் மைந்தர் அருள்தந்தை. அருள்சகாயம் மற்றும் சில நல்ல உள்ளங்கள் செய்த உதவி, மக்கள் வயிற்றை மட்டும்மல்ல, உள்ளத்தையும் குளிர்வித்து என்று சொல்லாலாம். அதற்கு பின்னால் உள்ள காயங்கள் மற்றும் கொடுத்தற்கு பின் ஏற்பட்ட காயங்களை மக்கள் புரிந்துக் கொள்ளவில்லை என்பது பங்குத்தந்தையின் மனதில் இரணமாக இருந்தது.
இதனிடைய பங்குத்தந்தை பணி செய்ய போதிய வாய்ப்புள்ள பங்குத்தளத்திற்கு தன்னை மாற்றும் படி ஆயரிடம் கேட்டார். அது மக்களுக்குப் பேரிடியாக இருந்தது. 04.06.2020 காலை 10.30மணிக்கு அருள்தந்தை. ஜோசப் ஸ்டாலின் புதிய பங்குத்தந்தையாக மறைவட்ட முதன்மைகுரு பேரருட் தந்தை. ஜோசப் ரவிபாலன் அவர்கள் தலைமையிலும், ஊர்நிர்வாகக் குழு முன்னிலையில் பொறுப்பேற்றார். அத்தோடு அருள்தந்தை. சந்தியாகு தட்டார்மடத்தில் தன் பணியை நிறைவு செய்தார்.
Information
Thattarmadam, Tuticorin Dt. 628 653
