My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Kottar > VATTAKARAI > Church of St. Joseph

Church of St. Joseph

Kottar Diocese • Tamil Nadu, India

Church History

இவ்வாலயமானது 1942 ல் உருவானது ஏறத்தாழ 77 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. திரு பாப்பு தேவசகாயம் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளவிளை அருகில் உள்ள வட்டக்கரை என்ற சிறு கிராமத்திலிருந்து இங்கு வந்து குடிபுகுந்தார். அதனால் அவரை இப்பகுதியினர் வட்டக்கரை நாடார் என்று அழைத்து வந்தனர். காலப்போக்கில் இவ்வூருக்கு வட்டக்கரை எனப் பெயர் வழங்கலாயிற்று. திரு பாப்பு அவர்கள் முடுதமாக இருந்த போது தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பருக்கு சிறு ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் இவ்வாலயம் விரிவு படுத்தப்பட்டு மேல ஆசாரிப்பள்ளம் பங்குடன் இணைக்கப்பட்டது. பின்னர் குருசடி பங்குடன் இணைக்கப்பட்டது. வட்டக்கரையில் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆலயம் மூன்றாம் முறையாக விரிவு படுத்தப்பட்டது. அக்காலத்தில் போதிய குருக்கள் இல்லாத காரணத்தால் இவ்வாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப் படாமலே இருந்தது. மேதகு ரோச் ஆஞ்ஞிசாமி சாமி ஆண்டகை அவர்கள் கோட்டாறு ஆயராக 1934-ல் ஆனபின்னர் இறையழைத்தல் பெருகியது. குருக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1940 -ல் அருட்தந்தை ரிச்சர்ட் ரொசாரியோ குருசடி பங்குத்தந்தையானார்கள். அதன் பயனாக 1943 ஆம் ஆண்டு, புனித சூசையப்பரின் நாளான மார்ச் 19 -ம் தேதி வட்டக்கரையில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு ஞாயிறு, கிறிஸ்துமஸ், இறப்பு, சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. காலஞ்சென்ற மேதகு வேலூர் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோணிமுத்து ஆண்டகை அவர்கள் குருசடி பங்குத்தந்தையாக இருந்து போது, வட்டக்கரை பங்கின் வெள்ளிவிழா 1968 ல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அருட்தந்தை ஜோசப் ராஜ் காலத்தில் 08-03-1992 ல் புதிய ஆலயத்திற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது. 26-06-1992 ல் அருட்தந்தை வின்சென்ட் அடிகளார் காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 23-10-1993 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அர்ச்சிப்பு விழாவுடன் வட்டக்கரை ஆலய பொன்விழாவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது. 2006 ல் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தை அருட்பணி ஆன்றனி அவர்கள். சிறப்புத் திட்டங்கள் : ஆயர் லியோன் தர்மராஜ் மருத்துவ உதவித் திட்டம் அருட்தந்தை மரியதாசன் ஏழைகள் கல்வி உதவி திட்டம். புனித சூசையப்பர் ஏழை குடும்பங்களை காக்கும் திட்டம். புனித மரியாள் பெரியோர்களை பராமரிப்பு திட்டம். பவள விழா 29.12.2017 ல் சிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிச் சிறப்பு : ஆலயத்தின் உள்ளே சூசையப்பர் கையில் குழந்தை இயேசு வலது கையில் இருப்பார். மண்ணின் மைந்தர்கள் : அருட்தந்தை M.S.அருள் (Late) அருட்தந்தை ஜேசுரெத்தினம் (Late) அருட்தந்தை L. மரிய ஆன்றனி கெர்மன் மற்றும் 5 -க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளையும் இறைப்பணிக்காக தந்துள்ளது வட்டக்கரை இறைசமூகம். வழித்தடம் : நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 38-A,B,C ( பீச் ரோடு to ஈத்தாமொழி செல்லும் வழி )Bus stop பெயர் மறவன்குடியிருப்பு Jn.

Information

Vattakarai Nagercoil 629 004
Diocese
Kottar
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.