My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Kuzhithurai > Senthurai > St Francis Xavier's Church

St Francis Xavier's Church

Kuzhithurai Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : செந்தறை மாவட்டம் : கன்னியாகுமரி மறை மாவட்டம் : குழித்துறை. நிலை : பங்குதளம் கிளைகள் : இல்லை குடும்பங்கள் : 300 அன்பியங்கள் : 9 பங்குத்தந்தை : அருட்பணி அருள் யூஜின் ராய் ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு. திருவிழா : ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறையில் ஏழு நாட்கள். வரலாறு : 1925 ம் ஆண்டுகளில் புதுக்கடை பங்கின் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி வர்க்கீஸ் அவர்கள் செந்தறையில் ஒரு கூடாரம் அமைத்து, கிறிஸ்தவ நாடகங்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னாளில் கிறிஸ்தவ ஆலயம் இப் பகுதியில் உருவாக காரணமாக இருந்தார். 1927 ம் ஆண்டு மிடாலம் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி எப்ரேம் கோமஸ் காலத்தில் தற்போதுஆலயம் இருக்கும் இடத்தில் ஓலைக்கூரை ஒன்று அமைத்து காலையில் ஓராசிரியர் பள்ளிக்கூடமாகவும் மாலையில் ஜெப வழிபாடும் நடந்து வந்ததாக கூறப் படுகின்றது. 1948 முதல் இனையம் பங்கின் கிளையாக செயல்பட்டு வந்த செந்தறையில் அருட்பணி ஜான் பெர்னாண்டஸ் அவர்கள் மாதம் ஒரு திருப்பலி நிறைவேற்றி உள்ளார். 1956 ம் ஆண்டுபூட்டேற்றி தனிப்பங்கான பின்னர் அதன் கிளைப்பங்காக செந்தறை அங்கீகரிக்கப் பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி வென்சஸ்லாஸ் அவர்களால் வாரம் ஒரு திருப்பலி நிறைவேற்றப் பட்டு வந்தது. இவருடைய பணிக்காலத்தில் பலர் கிறிஸ்தவர்களாகினர். 1976 ம் ஆண்டு அருட்பணி வெனான்சியஸ் பணிக்காலத்தில் பழைய ஆலயம் அகற்றப்பட்டு, ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட ஆலயம் கட்டப்பட்டு அப்போதைய ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 1981 ல் அருட்பணி ஜூலியஸ் அவர்களின் பணிக்காலத்தில் பல்வேறு மக்களையும் சந்தித்து பக்குவப்படுத்தி திருமுழுக்கு கொடுத்து செந்தறையில் கிறிஸ்துவின் பணியில் எழுச்சியை ஏற்படுத்தினார். இக்கால கட்டத்தில் புனித சவேரியார் ஆங்கிலப் பள்ளியையும் ஆரம்பித்தார். 27-05-1992 ல் கார்மல் சபை அருட்சகோதரிகள் இல்லம் கட்டப்பட்டு புனித சவேரியார் ஆங்கிலப் பள்ளி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு தற்போது ஹோலி ஏஞ்சல்ஸ் மேல் நிலைப்பள்ளியாக வளர்ந்து கல்வி பணியிலும் சிறந்து விளங்குகின்றது. புதிய ஆலயம் : 2001 முதல் 2003 வரை பணி செய்த அருட்பணி சூசை அவர்களின் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு, அதற்கு முன்னோடியாக பங்குப் பணியாளர் இல்லத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. 2003 முதல் 2006 வரை பணிசெய்த அருட்பணி ஜெயக்குமார் பணிக்காலத்தில் புதிய ஆலய கட்டுமானப் பணிக்கான வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டு மாதத் தவணையில் தொகைகள் சேகரிக்கப் பட்டு வந்தது. 2006 ல் பொறுப்பேற்ற அருட்பணி ஜோசப் ஜெயசீலன் பணிக்காலத்தில் 18-02-2007 ல் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு 2008 ல் பணி செய்த அந்தோணி M முத்து பணிக்காலத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பமானது. 2009 முதல் 2013 வரை பணிசெய்த அருட்பணி சேம் F மேத்யூ அவர்கள் பணிக்காலத்தில் பாதியளவு நிறைவு பெற்றிருந்த ஆலயப்பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று பணிகளை முழுவதும் நிறைவு செய்து 08-05-2011 ல் அப்போதைய கோட்டார் மறை ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. இத்துடன் அழகிய மாதா கெபியும் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. அருட்பணி சேம் மேத்யூ அவர்களின் பணிக்காலத்தில் செந்தறையை தனிப்பங்காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, இக் காலகட்டத்தில் பங்குப்பணியாளர் இல்லம் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு இத்துடன் கொடிமரப்பணிகளும் நிறைவடைந்து மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 20-08-2013 ல் செந்தறை தனிப்பங்காக உதயமானது. தனிப்பங்கின் முதல் அருட்பணியாளராக அருட்பணி ஒய்ஸ்லின் சேவியர் அவர்கள் பணியேற்று சிறப்பாக பணியாற்றினார். இவ் ஆலயத்தின் சார்பாக வருடத்திற்கு ஒரு ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுப்பது சிறப்பான கிறிஸ்தவ பண்பாகும். இம்மக்களை நாமும் மனமார வாழ்த்துவோம். செந்தறையானது கருங்கல் - தேங்காப்பட்டணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. (ஆலய வரலாறு பங்கின் விழா மலரிலிருந்து எடுக்கப் பட்டது)
Diocese
Kuzhithurai
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.