My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Tiruchirappalli > Malaiyadipatti > St Thomas Mount church

St Thomas Mount church

Tiruchirappalli Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : மலையடிப்பட்டி மாவட்டம் : திருச்சி மறை மாவட்டம் : திருச்சி மறை வட்டம் : மணப்பாறை பங்குத்தந்தை : அருட்பணி அம்புறோஸ் நிலை : திருத்தலம் பங்கு : புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 08.00 மணிக்கும் பங்கு ஆலயத்தில் காலை 11.00 மணிக்கு புனித தோமையார் மலை திருத்தலத்தில் சனிக்கிழமை திருப்பலி : மாலை 06.00 மணிக்கு (கெபியில்) வியாழன் மலையில் சிறப்பு ஆராதனை காலை 11.00 மணிக்கு திருப்பலி திருவிழா : ஜூலை மாதம் 03 ம் தேதி. சிறப்பு தகவல்கள் : புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், புனித தோமையார் மலை திருத்தலம் மற்றும் தூய பனிமய மாதா ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களும் காணப்படுவது மலையடிப்பட்டி தலத்திருச்சபையின் தனிச்சிறப்பு. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயமானது 1885 ல் மண்ணின் மைந்தரால் கட்டப்பட்டது. புனித தோமையார் கன்னியர் இல்லமானது இங்கு உள்ளது. இந்த இல்லமானது ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்து பராமரித்து வருவது தனிச் சிறப்பு வாய்ந்தது. புனித சவேரியார் ஆண்கள் தொடக்கப்பள்ளி மற்றும் புனித தெரசம்மாள் பெண்கள் தொடக்கப்பள்ளியும் இங்கு உள்ளன. இப்பங்கின் முக்கிய நிகழ்வாக ஈஸ்டர் முடிந்த 8 ம் நாளில், அதாவது தோமையார் மலை ஆலயத்தில் உள்ள புனித தோமையார் சுரூபமனாது இரவு 07.00 மணிக்கு, அலங்காரத் தேரில் கீழே வந்து, பாஸ்கா அரங்கத்தில் ஞாயிறு அதிகாலை 01.00 மணிக்கு உயிர்த்த ஆண்டவருடன் சந்திப்பு என்கிற சிறப்பு வாய்ந்த வழிபாட்டு நிகழ்வு நடைபெறுகிறது. இந்த பாஸ்கா விழாவில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களில் இருந்தும் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை ஆலய மக்கள் செய்திருப்பார்கள். காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள். 1600 ம் ஆண்டில் மலைமீது கட்டப்பட்ட தூய தோமையார் மலை திருத்தலம் தனிச்சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். மலை உச்சியில் இருப்பதால் இத்திருத்தலத்தை புகைப்படம் எடுப்பது சற்று சிரமமான காரியம். 1714 ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட தூய பனிமய மாதா ஆலயமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மேலும் அழகிய மாதா கெபியானது கட்டப்பட்டு சனிக்கிழமைகளில் மாலை 06.00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகின்றது. சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. மலையும், மரங்களையும் சுற்றிலும் கொண்ட அழகிய கிராமம் மலையடிப்பட்டி. மேலும் தனிச்சிறப்பு வாய்ந்த மூன்று ஆலயங்கள் காணப்படுவதால் ஆலய தரிசனம் செல்பவர்கள் தவறாமல் செல்ல வேண்டிய இடம் மலையடிப்பட்டி. வழித்தடம்: மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் சாலையில், மலைத்தாதம்பட்டி ஊரிலிருந்து இடப்புறமாக இரண்டு கிமீ உள்ளே சென்றால் மலையடிப்பட்டி ஆலயம் உள்ளது.
Diocese
Tiruchirappalli
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.