Our Lady of Seven Dolours Church - புனித வியாகுல அன்னை ஆலயம்
Church History
புனித வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது ஆரம்பத்தில் நாஞ்சூர் பங்கின் கிளையாகவும், பின்னர் கோட்டைக்காடு பங்கின் கிளையாகவும், தொடர்ந்து வேங்கிடகுளம் பங்கின் கிளையாகவும், பின்னர் ஆலங்குடி பங்கின் கிளையாகவும் இருந்தது.
2006-ஆம் ஆண்டில் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.
முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை செபாஸ்டின் அவர்கள் பொறுப்பேற்று, புதிய ஆலயப் பணிகளை ஆரம்பித்துச் சிறப்பாகப் பணியாற்றினார்.
தொடர்ந்து பொறுப்பேற்ற பங்குத்தந்தை அருட்தந்தை சவேரியார் பணிக்காலத்தில் ஆலயப்பணிகள் நிறைவுப் பெற்று 02- 06-2017 அன்று தஞ்சாவூர் ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி ஆகியோர் இணைந்து அர்ச்சித்துத் திறந்து வைத்தனர்.
நான்கு வருடங்கள் இவ்வாலய கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.
மிகவும் அழகான இவ்வாலயமானது கோத்திக் கட்டிடக் கலை, நவீனக் கட்டிடக்கலை மற்றும் அரச காலத்துச் சாளரக் கட்டிடக் கலைகளை இணைத்துக் கட்டப்பட்டதாகும்.
இதன் வட்ட வடிவ மேற்கூரையில் (Doom) வியாகுலத்தாயின் ஏழு வியாகுலங்களும் சித்திரமாக அழகுற வரைந்து வைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
மேலும் புனித வியாகுல அன்னையை இப்பகுதியில் உள்ள பிற சமய சகோதர சகோதரிகள் தங்கள் குலதெய்வம் என்று போற்றுகின்றனர்.
அமெரிக்காவைச் சார்ந்த கணிப்பொறி பேராசிரியர் (Computer Professor) Vaclav Rajlich அவர்களது ஊரில் வியாகுல அன்னைக்கு ஆலயம் உள்ளது. அரசடிபட்டியிலும் வியாகுல அன்னைக்கு ஆலயம் கட்டப்படுவதைக் கேள்விப்பட்டு ஐம்பது இலட்சம் ரூபாய் (1,00,000 அமெரிக்கன் டாலர்) -ஐ ஆலயக் கட்டுமானப் பணிக்குக் கொடுத்து உதவினார்கள்.
அதன்பின்னர் Vaclav அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனைப்பட்டார்கள். ஏழெட்டு மாதங்களாகக் கீமோ சிகிச்சை மேற்கொண்டிருந்தார். தனது புற்றுநோய் நீங்க அன்னையிடம் வேண்டினார். அதுமுதல் நாள்தோறும் இந்த ஆலய மக்களும் பங்குத்தந்தையும் மனமுருக Vaclav அவர்கள் நலம் பெற அன்னை வழியாக இறைவனிடம் வேண்டிக் கொண்டனர்.
என்னே ஆச்சரியம்..! Vaclav Rajlich அவர்களது புற்று நோய் புனித வியாகுல அன்னையின் அருளால் மறைந்து போனது. பல்வேறு பரிசோதனைகளும் செய்து பார்த்தப் போது புற்றுநோய் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லா வண்ணம் குணமடைந்தார். புனித வியாகுல அன்னைக்கு அனைவரும் மனதார நன்றி செலுத்தினார்கள்.
இவ்வாறு பல்வேறு வேண்டுதல்களுடன் வருகின்ற மக்கள் தங்கள் தேவைகளை அன்னையிடம் வேண்டிச் செபிக்க அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார் புனித வியாகுல அன்னை.
84 வாரங்களாகச் சனிக்கிழமை தோறும் ' பிரச்சினைகளின் முடிச்சவிழ்க்கும் (வியாகுல) அன்னை, நவநாள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கிளைப் பங்குகள்
1. தவளப்பள்ளம் - புனித மாதரசி மாதா ஆலயம்
2. பாத்திமா நகர் - புனித பாத்திமா மாதா ஆலயம்
Information
Arasadipatty,
Kummangulam B.O.
Alangudi Tk. - Pudukkottai Dt.
Tamil Nadu - 622 301 - India




