My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Pondicherry > Pondicherry & Cuddalore > Iruthayampattu > Our Lady Queen of Heaven Church - புனித விண்ணரசி அன்னை ஆலயம்

Our Lady Queen of Heaven Church - புனித விண்ணரசி அன்னை ஆலயம்

Pondicherry & Cuddalore Diocese • Pondicherry, India

Church History

இருதயம்பட்டு என்ற இவ்வூரில் பல ஆண்டுகளுக்கு முன்னர், இரு உடையார்கள் இருந்ததால், இரு உடையார் எனப்பெயர் பெற்ற ஊர் நாளடைவில் ஈருடையாம்பட்டு என்றாகி, பின்னர் இருதயம்பட்டு என்று அழைக்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இருதயம்பட்டில் கிறிஸ்தவம் துளிர் விட்டது. 1883ஆம் ஆண்டிலிருந்து கோவிலானூர் போர்த்துகீசிய பாத்ரோவோதா அமைப்பின் கீழ் இருந்தது. 1887ஆம் ஆண்டுவரை கோனான்குப்பம் ஆலயத்தின் கீழ் இருந்தது. 1888ஆம் ஆண்டு விரியூர் பங்கில் சேர்க்கப்பட்டது. 1903ஆம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டு, தனிப்பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தை அருட்பணி ஹூகே அடிகள் ஆவார். 1954 ல் அருட்பணி M.C ஆபிரகாம் அடிகள் பணிக்காலத்தில் ஆலய பொன்விழா கொண்டாடப் பட்டது. 1970ஆம் ஆண்டு அருட்பணி பெந்தேகோஸ்தே அடிகள் பணிக்காலத்தில் ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு அருட்பணி T. S ராஜரத்தினம் பணிக்காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டு அருட்பணி C. டேவிட் அடிகள் பணிக்காலத்தில் ஆலய நூற்றாண்டு விழாச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. 2008ஆம் ஆண்டு அருட்பணி S. பால்ராஜ் பணிக்காலத்தில் ஆலயம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு அழகு படுத்தப் பட்டது. 2013ஆம் ஆண்டுப் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியச் சாமி பணிக்காலத்தில் பதுவை நகரில் 12.12.2013 அன்று புனித அந்தோணியார் சிற்றாலயம் கட்டப்பட்டு அருட்தந்தை ஆரோக்கியராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. மாதத்தின் முதல் செவ்வாய் காலை 07.00 மணிக்கு இங்குத் திருப்பலி நடைபெறும். 07.10.2015 அன்று பதுவை நகரில் புனித அந்தோணியார் செபகூடம் கட்டப்பட்டு அருட்தந்தை அருளானந்தம் (மறை மாவட்ட முதன்மைக் குரு) அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. இந்தச் செபக்கூடத்தில் ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை செபம் நடைபெறும். கிளைப்பங்குகள்: 1. செம்படை - புனித பாத்திமா அன்னை ஆலயம் (1950) 2. சீர்பந்தநல்லூர் - புனித அந்தோணியார் ஆலயம் (1993) 3. அரும்பரம்பட்டு 4. காங்கியனூர் 5. மேலந்தல் பங்குத்தந்தையர்கள்: 1. Rev, Fr. J. ஹூகே (1903) 2. Rev, Fr. M. கோலின்ஸ் (1904) 3. Rev, Fr. L. அத்நார்ட் (1909) 4. Rev, Fr. H. டெலசோன் (1909) 5. Rev, Fr. F. இரபேல் (1909-1914) 6. Rev, Fr. M. இஞ்ஞாசி (1915) 7. Rev, Fr. லூர்துமரி அருள் (1916, 1922, 1925) 8. Rev, Fr. M.D. ராயன் (1916,1931, 1933) 9. Rev, Fr. A.L. பாக்கியநாதர் (1925-1927) 10. Rev, Fr. P. மரியகுழந்தை (1927-1930) 11. Rev, Fr. N. R. தேவண்ணா (1930-1933) 12. Rev, Fr. G. போனீஸ் (1933-1936) 13. Rev, Fr. R. சோவெ (1936-1938) 14. Rev, Fr. P. J. ஜேக்கப் (1938-1948) 15. Rev, Fr. M. C. ஆபிரகாம் (1948-1955) 16. Rev, Fr. M. மத்தேயு நெல்லிக்குன்னம் (1955-1958) 17. Rev, Fr. P. M. குரியாக்கோஸ் (1958-1961) 18. Rev, Fr. G. பெந்தகோஸ்த் (1961-1976) 19. Rev, Fr. T. S. ராஜரத்தினம் (1976-1988) 20. Rev, Fr. R. எலியாஸ் (1988-1989) 21. Rev, Fr. I. ஜோசப் ஆல்பர்ட் (1989-1996) 22. Rev, Fr. C. தாவீது (1996-2005) 23. Rev, Fr. S. பவுல்ராஜ் (2005-2012) 24. Rev, Fr. M. ஆரோக்கியசாமி (2012-)

Information

Irudayampattu B.O. Moongilthuraipattu Via. Villupuram Dt.- Tamil Nadu, India- 605 702

Church Photos

Diocese
Pondicherry & Cuddalore
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.