My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Tuticorin > Keezhavaippar > Our Lady of Assumption Church (புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்)

Our Lady of Assumption Church (புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்)

Tuticorin Diocese • Tamil Nadu, India

Church History

Keezhavaippar is one of the prominent ‘PADROADO’ parishes of Pearl Fishery Coast and formed part of the Madras-Mylapore diocese. Even after the diocese of Thoothukkudi was erected in 1923, this parish continued to remain under the Mylapore diocese. After the concordat between Vatican and Portugal on 1st April 1925, Keezhavaippar came under the diocese of Thoothukkudi on 4th April 1930. According to the mission diary of the Jesuits, already in 1571, there was a Church at Keezhavaippar, dedicated to Our Lady of Assumption. The altar was renovated in 1982. The front portion of the Church was extended in 1998. The new Presbytery was built in 1998. The Succession of Parish Priests: 1. Rev. Fr. F.M. Packiam - 1928 – 1930 2. Rev. Fr. Mathew - 1930 – 1933 3. Rev. Fr. Mariadasan - 1933 -1935 4. Rev. Fr. J.V. Poobal - 1935 – 1936 5. Rev. Fr. J.Payappalli - 1936 – 1939 6. Rev. Fr. Antony S. Fdo - 1939 – 1946 7. Rev. Fr. Paul Bastian - 1946 – 1951 8. Rev. Fr. L.X. Fernando - 1951 – 1953 9. Rev. Fr. Augustine - 1953 – 1955 10. Rev. Fr. T. Mascranas - 1955 – 1960 11. Rev. Fr. M. Viagulam - 1960 – 1961 12. Rev. Fr. Richard Rodrigo - 1961 - 1967 13. Rev. Fr. Jesu Arulappan - 1967 – 1970 14. Rev. Fr. J.S. Lobo - 1970 – 1972 15. Rev. Fr. Alangaram - 1972 - 1974 16. Rev. Fr. Venantius Fdo - 1974 17. Rev. Fr. Xavier Ignatius - 1974 – 1978 18. Rev. Fr. Jebamalai Pitchai - 1978 – 1981 19. Rev. Fr. Dasan Dalmeida - 1981 – 1982 20. Rev. Fr. Jesu Arulappan - 1982 – 1983 21. Rev. Fr. Karunagaran Gomez - 1983 – 1984 22. Rev. Fr. Anton Cruz - 1984 – 1988 23. Rev. Fr. Arthur James - 1988 – 1990 24. Rev. Fr. Rex A.J - 1990 – 1991 25. Rev. Fr. Isidore - 1991 – 1992 26. Rev. Fr. Cruz Marian - 1992 – 1993 27. Rev. Fr. U Amaladas - 1993 – 1994 28. Rev. Fr. Rubert Arulvalan - 1994 - 2000 29. Rev. Fr. Starwin - 2000 – 2002 30. Rev. Fr. Ravindran Fdo - 2002 – 2007 31. Rev.Fr. Maria Valan - 2007 – 2010 32. Rev. Fr. Pratheep - 2010 – 2012 33. Rev. Fr. Dixon - 2012 - 2017 34. Rev. Fr. Aloysius 2017 - 2019 35. Rev. Fr. Antony Jegaseesan 2019 - முற்காலத்தில் திராவிட நாட்டின் தென்பகுதியை பாண்டிய அரசு ஆண்டு வந்தது. இந்த நாட்டின் பாண்டிய குல சத்ரியனாக மீன் கொடி ஏந்தி நெய்தல் நிலத்து பரதவர்கள் ஆட்சியாளர்களாக, தளபதியாக, வீரர்களாக வாழ்ந்து வந்தனர். உலகப் புகழ் பெற்ற கொற்கை துறைமுகத்திலிருந்து முதன்முதலாக மேலைநாடுகளுக்கு இவர்கள் வணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். சீர்மிகு மீனவ பரதவ இனமக்கள் வாழ்ந்து வந்த ஊர்களில் ஒன்று தான் வைப்பாறு. தென்தமிழகத்தில் பாயும் வைப்பாறு நதியின் பெயரிலேயே இவ்வூரின் பெயரும் விளங்கலாயிற்று. பழையாறு, மஞ்சக்கழியாறு, கச்சடப்பு, பெரியாறு என நான்குப் பகுதிகளாக வைப்பாறு கடலில் கலக்கிறது. முற்காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்கள், துறைமுகங்கள் அனைத்தும் ஆற்றையடுத்தே உருவாயின. எனவே வைப்பாறு பெரிய நகராக வளமான மேய்ச்சல் பகுதிகளை உள்ளடக்கி "சிறிய வங்காளம்" என அழைக்கப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் பாண்டிய அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, விஜயநகர பேரரசு ஆட்சியின் கீழ் குறுநில மன்னர்களாலும், பாளையக்காரர்களாலும், நாயக்கர்களாலும் இப்பகுதி ஆளப்பட்டது. எனவே ஆண்ட பரதவ இனம் அடிமை இனமானது. முத்துக்குளித்தல், சங்கு குளித்தல், மீன் பிடித்தல், உப்புத்தொழில், வேளாண்மை, ஏற்றுமதி என தொழில்வளத்தில் சிறந்து விளங்கியது வைப்பாறு. மாதத்திற்கு 2 அல்லது 3 சரக்குக் கப்பல்கள் வைப்பாறு துறைமுகத்திற்கு வந்து போகும். இவ்வேளையில் ஆட்சியாளர்களும், முகம்மதியரும் சேர்ந்து இவர்களை ஒடுக்கினர். முத்துக்குளித்தல் உரிமையை பறித்துக் கொண்டனர். ஏராளமான வரிச்சுமையை மக்கள் மேல் திணித்தனர். அரசியல், சமூக, பொருளாதார நிலையில் அடிமைப்பட்டுக் கிடந்த இம்மக்கள் விடியலை எதிர்நோக்கி வாழ்ந்தனர்... கிபி 1535 ஆம் ஆண்டு பரதவ குல மீனப் பெண்ணை, மூர்முகமதியன் தகாத வார்த்தைகளால் ஏளனமாகப்பேச, தனக்கு நேர்ந்த அவமானத்தை, அவள் தனது கணவனிடம் தெரிவிக்க, அவனும் அநியாயத்தை தட்டிக் கேட்க, கோபம் கொண்ட முகமதியன், மீனவனின் காதில் நீண்டு தொங்கிய வடிகாதினை கத்தியால் அறுத்து அதிலிருந்து முத்து பதித்த தங்க வளையத்தை பறித்துச் சென்றான். பரத குலத்திற்கே இது அவமானம் எனக் கருதப்பட்டது. தூத்துக்குடியில் பரதவர்களுக்கும் முகமதியர்களுக்கும் இனப்போர் நடந்தது. இருபுறமும் ஏராளமான உயர்ச்சேதம் ஏற்பட்டது. ஆட்சியாளர்கள் பரதவர்களுக்கு கடுமையான வரிகளை விதித்துக் கொண்டேயிருந்தனர். இவ்வேளையில் கேரளாவின் மலபார் பகுதியைச் சேர்ந்த ஜான் டி குரூஸ் என்ற வியாபாரியின் யோசனைப்படி, போர்த்துக்கீசியர்களின் ஆதரவைப் பெற பரதவ மக்கள் கிறிஸ்தவ திருமறையைத் தழுவவும், நிரந்தர பாதுகாப்பிற்கு இதுவே தீர்வு எனவும் எண்ணி உறுதி கொண்டனர். முதலில் 15 பேர் அதன்பிறகு 70 பேர் (வைப்பாறு ஊரில் இருவர்) என பரதவ சமுதாயத்தின் எல்லா ஊர்களிலிருந்தும் பெரிய குரு மிக்கேல் வாஸ் என்பவரின் திருக்கரங்களால் திருமுழுக்குப் பெற்றனர். தொடர்ந்து எல்லா கடற்கரை ஊர்களிலும் திருமுழுக்கு நடைபெற்று மக்கள் கிறிஸ்தவம் தழுவினர். கி.பி 1537 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் வைப்பாறு மக்கள் திருமுழுக்குப் பெற்றனர். "ஒரு வடிகாதினைக் கொண்டு ஆயிரக்கணக்கான ஆன்மாக்களை மீட்டார்" என இந்நிகழ்வை சுவாமி தேக்ஸயிரா கி.பி.1580 ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே ஒரு இனம் முழுவதும் திருமறையைத் தழுவியதென்றால் அது பரதவ இனமேயாகும். புனித பிரான்சிஸ் சவேரியார் வருகை: கி.பி 1542-ம் ஆண்டு மே 6ம் நாளில் கோவா வந்தடைந்த புனித பிரான்சிஸ் சவேரியார், அதன் பிறகு முத்துக்குளித்துறை பகுதி முழுவதும் குறிப்பாக "ஏழுகடல்துறையில்" (வேம்பாறு, வைப்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்துர், மணப்பாடு) மறைப்பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக வைப்பாறில் 20 நாட்களுக்கு மேலாகத் தங்கியிருந்து ஏராளமான மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார். ஏராளமான புதுமைகளையும் இங்கு நிகழ்த்தினார். அந்நாட்களில் வைப்பாறில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆலயம்: கி.பி 1549 ஆம் ஆண்டு முதல் ஆலயம் அமைக்கப்பட்டது. வடுகர்களால் இவ்வாலயம் அழிக்கப்பட்டது. பின்னர் 1551-ம் ஆண்டு இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயமும் சிதிலமடைந்து போகவே, கி.பி. 1599-ம் ஆண்டு தற்போது உள்ள ஆலயம் கட்டப்பட்டு கி.பி. 1600 ஆம் ஆண்டு மாதாவின் பெயரில் புனிதப்படுத்தப் பட்டது. கி.பி. 2000 ஆம் ஆண்டில் ஆலயத்தின் 400-வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாதாவின் சுரூபம்: இம்முன்னோர்கள் கிறிஸ்தவ திருமறையைத் தழுவிய பின்னரும் கூட பிற பெண் தெய்வங்களை வணங்கி வந்தனர். இந்த நிலையிலிருந்து இவர்களை மனம்மாற்ற மணிலாவிலிருந்து 1555-ம் ஆண்டு தூத்துக்குடி பேராலயத்திற்கு மாதா சுரூபம் கொண்டுவரப் பட்டது போல, இத்தாலி நாட்டின் லொரோற்றா நகரிலிருந்து இயேசு சபை குருக்களால் 1557-ம் ஆண்டு மாதாவின் சுரூபம் வைப்பாறு கொண்டு வரப்பட்டது. 463 ஆண்டுகளாக மாதாவின் சுரூபம் வர்ணம் பூசப்படாமலே வனப்போடும், வளமையோடும் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. வனப்போடு வீற்றிருக்கும் மாதாவை இறைமக்கள் பரலோக மாதா, மோட்ச இராக்கினி, மோட்ச அலங்காரி, விண்ணக அரசி, விண்ணேற்பு அன்னை எனப்பல சிறப்புப் பெயர்களால் அழைக்கின்றர். பங்கு உதயம்: கி.பி 1532 ஆம் ஆண்டு முதல் போர்த்துக்கீசியர் ஆளுகையின் கீழும்,1658 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் ஆளுகையிலும், 1782 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள் ஆளுகையிலும் இருந்த இப்பகுதி மக்கள், கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து இருப்பது வியப்புக்குரியது. கி.பி 1537-ல் கோவா மறைமாநில ஆளுகையில் வைப்பாறு இருந்தது. கத்தோலிக்க குருவானவர் என்ற முறையில் முதலில் புனித பிரான்சிஸ் சவேரியார், இரண்டாவதாக அருள்பணி. அந்தோணி கிரிமினாலி மூன்றாவதாக அருள்பணி. என்றி என்றிக்ஸ் ஆகியோரது மேற்பாற்வையில் வைப்பாறு இருந்தது. குருக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று திருப்பலிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆலய உபதேசியார் ஞாயிறு செப வழிபாட்டை நடத்தி வந்தார். ஞாயிறு காலையில் ஆண்களும், மாலையில் பெண்களும் ஞான உபதேசம் பெற்று வந்தனர். கி.பி 1603 ம் ஆண்டு அருள்பணி.‌ பெர்னார்டு டி அல்மெய்தா என்பவர் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இயேசுசபை குருக்களே தொடர்ந்து பணியாற்றி வந்தனர். திருத்தேர் பவனி: கி.பி 1700 ஆம் ஆண்டிலிருந்து மாதாவின் தேர் கடந்த 320 ஆண்டுகளாக ஊரை வலம் வந்து கொண்டிருக்கிறது.

Information

Kilavaippar B.O. Vilathikulam Tk. - Tuticorin Dt. Tamil Nadu - 628 903 - India
Diocese
Tuticorin
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.