My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Kumbakonam > Papanasam > Shrine of St. Sebastian

Shrine of St. Sebastian

Kumbakonam Diocese • Tamil Nadu, India

Church History

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் நகரின் மையப்பகுதியில் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் அமைந்துள்ளது. நூற்றாண்டு விழா கொண்டாடிய சக்தி வாய்த்த இத்திருத்தலம் பல சிறப்புகளைக் கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் செபஸ்தியார் விளங்குகின்றார். 1933ம் ஆண்டு, திருத்தலத்தின் முதல் பங்குத் தந்தையாக அருட்பணி. ஜே. சி. காப்பன் பொறுப்பேற்றார். 1990ம் ஆண்டு திருத்தலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 1992ல் கோவில் முழுவதும் புதுப்பிக்கும் பணி அருட்தந்தை மரியதாஸ் அவர்களால் நடைபெற்றது. கோயிலுக்குப் பின்புறம் உள்ள அடர்ந்த காடுகளை அகற்றி புனித செபஸ்தியார் மணிமண்டபமும், புனித செபஸ்தியார் கலையரங்கமும் கட்டினார். கோயிலின் உள்ளே வடபுறத்திலும், தென்புறத்திலும் படுக்கை நிலையில் உள்ள செபஸ்தியாருக்கும், நின்று கொண்டிருக்கும் செபஸ்தியாருக்கும் தனித்தனியாகப் பீடங்கள் அமைத்தார். மர வேலைப்பாடுகளுடன் தேர் போல் அமைத்து புனிதரின் சுரூபத்தை நிறுவியுள்ளார். கேரளாவிலிருந்த கொண்டு வரப்பட்ட முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட பழமை வாய்ந்த ஆளுயுர சுரூபத்தை ஆலய வளாகத்தில் வைத்துச் சிறப்பித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். முதல் நாள் மூன்று தேர்களும், அடுத்த நாள் ஐந்து தேர்களும் பாபநாசம் முழுக்க சுற்றி விடியும் பொது ஆலயம் திரும்பும். மூன்றாம் நாள் திருவிழா திருப்பலி கொண்டாட்டம் ஆயரால் நிறைவேற்றப்பெறும். திருவிழாவிற்கு அனைத்து ஊர்களிலிருந்தும் சிறப்புப் பேருந்து வசதிகள் இருக்கும். தொடர் வண்டிகள் நின்று செல்லும். சிறப்பு கடைத்தெரு, பொழுது போக்கு விளையாட்டுக்களும் இருக்கும்.

Information

Railway Station Road, Papanasam - Thanjavur Dt. Tamil Nadu - 614 205 - India

Church Photos

Diocese
Kumbakonam
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.