My Catholic Church LogoMy Catholic Church
Get App

St Joseph's Church

Sivagangai Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : T. சூசையப்பர் பட்டினம் மாவட்டம் : இராமநாதபுரம் மறை மாவட்டம் : சிவகங்கை தாலுகா : இராமேஸ்வரம் பங்குத்தந்தை : அருட்பணி அருள் சந்தியாகு இணை பங்குத்தந்தை : செபாஸ்டின் நிலை : பங்குதளம் கிளைகள் : 1. அற்புத குழந்தை இயேசு திருத்தலம் 2. புனித சந்தியாகப்பர் ஆலயம் 3. புனித சவேரியார் ஆலயம் குடும்பங்கள் : 3000 அன்பியங்கள் : 99 மையம் : 24 ஞாயிறு திருப்பலி : காலை 07.15 மணிக்கு நாள்தோறும் திருப்பலி : காலை 05.30 மணிக்கு திருவிழா : ஏப்ரல் மாதம் 22 -ஆம் தேதி முதல் மே மாதம் 01 -ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள். வழித்தடம் : இராமநாதபுரம் - இராமேஸ்வரம் சாலையில், தங்கச்சிமடத்தில், T. சூசையப்பர் பட்டினத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. தங்கச்சிமடம் பெயர்க்காரணம் : 1819 இம் ஆண்டு ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் விஜய ரகுநாத சேதுபதிக்கு வாரிசாக இரு வீர மங்கையர்கள் அவர்கள் கணவன்மார்களுடன் வாழ்ந்து வந்தனர், மன்னர் தனது மருமகன்கள் இருவரையும் சமஸ்தானத்திற்கு பாத்தியபட்ட தென்னிந்திய காசி என்ற அழைக்கப்படும் அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலய திருப்பணிகளுக்கும் மற்றும் ஆலயத்தை தரிசிக்க வரும் நேபாளம், வட மற்றும் தென் இந்திய யாத்ரிகர்ளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நியமித்து இருந்தார். ராமநாதபுரத்திலுருந்து இராமேஸ்வரம் வரை வழி நெடுகிலும் பயணிகள் தங்கவும் இளைப்பாறவும் இலவச அன்னதான சத்திரங்கள், குளங்கள் மற்றும் மண்டபத்திலுருந்து கடலை கடந்து இராமேஸ்வரம் செல்ல தேவையான மரக்கலங்கள் அவைகளை ஓட்டி செல்ல படகோட்டிகள் போன்ற வசதிகளை அமைத்தது இருந்தார். (இன்றும் கூட நீங்கள் கவனிக்கலாம் பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் வழியெங்கும் சத்திரங்கள், குளங்கள் திராவிட கால பாரம்பரியத்துடன் அதே சமயம் சிதைந்தும் தனது உருவை இழப்பதை..) இவ்வாறு மக்கள் குறிப்பறிந்து செங்கோல் ஆட்சி செய்த மன்னனுடைய புகழுக்கு களங்கம் விளைவித்த நிகழ்வுக்கு அவர்கள் மருமகன்களே காரணமாக அமைந்தது கொடுமையே ஆயினும் அவை வாழ்வின் தர்ம நெறிகளை உலகிருக்கு உரைக்க பயன்பட்டன என்று சொன்னால் அது மிகையல்ல.. மன்னருக்கு தெரியாமல் மருமகன்கள் இருவரும், பயணிகளிடம் மரகலங்களில் செல்வதற்கு கட்டணம் வசூலித்தனர். இதை கண்டு பொறுக்காத ஏழை பயணிகள் மன்னரிடம் முறையிட்டனர். மன்னரின் இதயம் சுக்கு நூறாகியது, தமது மருமகன்களே இவ்வாறு செய்து விட்டார்களே என்று மனம் வருந்தி நேராக தனது மகள்களிடம் சென்று தவறுக்கு காரணமானவர்கள் யாரு என்று சொல்லாமல், தவறை விளக்கி இது போன்று தெய்வ காரியங்களில் தவறு செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று அவர்களிடமே கேட்டார், அதற்கு அந்த நீதிமான்களின் வாரிசுகளோ 'இந்த தவறு செய்தவர்களின் தலை குடி மக்கள் முன்னிலையில் கொய்ய வேண்டும் என்றனர்'. மன்னரும் அவ்வாறே செய்ய உத்தரவிட்டார். தங்கள் கணவன்மார்கள் கொல்லப்பட்டதை அறிந்து கதறி அவர்கள் அழுத போதும் 'நீதி அனைவருக்கும் சமம்' என்றதில் தம் மனதை தேற்றி கொண்டனர். எனினும் சில நாட்களுக்கு பிறகு தங்களின் அன்பான கணவன்மார்களின் பிரிவு தாங்காது தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். சகோதரிகளில் மூத்தவள் ஒரு குளத்தில் விழுந்து உயிர் துறந்தாள், இளையவள் சிறிது தூரம் சென்று அங்கே உள்ள குளத்தில் விழுந்து உயிர் துறந்தாள். பத்தினிகளின் இந்த முடிவை கண்டு மக்கள் அவர்களை தெய்வமாக வணங்கினர். அவர்களின் நினைவாக மூத்தவள் இறந்த இடத்திற்கு அக்காள்மடம் என்றும் இளையவள் இறந்த இடத்தை தங்கச்சிமடம் என்றும் பெயரிட்டு வணங்கினர். இவ்வாறு சிறப்பு பெற்று விளங்கும் தங்கச்சிமடத்தில், புனித சூசையப்பர் பெயரில் ஆலயம் உள்ள இடத்திற்கு சூசையப்பர் பட்டினம் என்று பெயர் வைக்கப்பட்டு, ஊர் பெயரின் முன்னால் T (T என்பது தங்கச்சிமடம் ஆகும்) சேர்த்து T சூசையப்பர் பட்டினம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் பங்கு ஆலயமான புனித சூசையப்பர் ஆலயத்தை சுற்றிலும் மூன்று கிளை ஆலயங்கள் இருப்பது தனிச்சிறப்பு.
Diocese
Sivagangai
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.