Our Lady of Assumption - St. Michael Shrine
Church History
வெங்கடாசலபுரத்தில் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பனை ஓலைக் குடிசையில் தொடங்கிய கிறிஸ்தவ விசுவாசப் பயணம் புனித பரலோக அன்னையின் அரவணைப்பிலும், இணைப் பாதுகாவலரான புனித மிக்கேல் அதிதூதரின் பாதுகாவலிலும் இன்று வரையிலும் தொடர்கிறது.
வெங்கடாசலபுரமானது தொடக்கத்தில் காமநாயக்கன்பட்டி பங்கின் ஒரு பகுதியாக விளங்கியது. கி.பி 1898ஆம் ஆண்டு ரூ. 8000 பொருட்செலவில் பாரம்பரியமிக்க இந்தத் திருத்தல ஆலயம் கட்டப்பட்டது.
பின்னர் 1953ஆம் ஆண்டு முதல் கோவில்பட்டி பங்கின் கீழ் வெங்கடாசலபுரம் செயல்பட்டு வந்தது.
06.06.2010 அன்று வெங்கடாசலபுரம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.
இவ்வூரின் அமைப்பு மற்றும் வழிபாட்டு முறை ஆன்மீகத்தின் ஆழமான பாரம்பரியத்தை விளக்கிச் சொல்கிறது. ஊரில் நுழையும்போது புனித குழந்தை தெரசாள் குருசடியும், மறுமுனையில் புனித சவேரியார் குருசடியும், இன்னொரு புறம் புனித செபஸ்தியார் குருசடியும் அமைந்திருப்பது இறைபராமரிப்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. இதன் அடிப்படையில் தற்போதைய ஆலயத்தின் வடபகுதியில் புனித மிக்கேல் அதிதூதர் குருசடியும் (பனை ஓலை குருசடி) இருந்துள்ளது. எனவே மக்களிடையே பரலோக அன்னை மீது கொண்ட பக்தி போன்று புனித மிக்கேல் அதிதூதர் மீதும் ஆழமாக வளர்ந்து வந்துள்ளது.
திருவிழாவின்போது சென்னை வாழ், வெங்கடாசலபுரம் பங்கு மக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று, இணைந்து சிறப்பிப்பது தனிச்சிறப்பு. மேலும் பங்கின் வளர்ச்சியிலும் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை மாலையில் திருப்பயணிகள் திருத்தலத்தில் தங்கி இருந்து செபிக்கின்றனர். ஞாயிறு காலை 04:30 மணிக்குத் திருப்பயணிகளுக்காகத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
எண்ணற்ற அற்புதங்கள் இத்திருத்தலத்தில் நடந்து வருவதால் மறைமாவட்ட திருத்தலமாக உயர்த்தப்பட்டு, மக்களின் ஆன்மீக புகலிடமாகத் திகழ்கிறது.
ஆலயத்தில் புதுமைக் கிணறு ஒன்று உள்ளது. ஆலயத்திற்கு வருகிற திருப்பணிகள் கிணற்றில் குளித்து விட்டு, ஆலயத்தைச் சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கிளைப்பங்குகள்:
கருப்பூர் (புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்)
கோட்டையூர்,
மீனாட்சிபுரம்
கடலையூர்
பங்குத்தந்தையர்:
1. அருட்பணி. V. S. அந்தோணிராஜ் (2010-2015)
2. அருட்பணி. மைக்கேல் வில்சன் (2015-2019)
3. அருட்பணி. S. அல்போன்ஸ் (2019 முதல் )
Information
Uppathur Road,
Venkatachalapuram,
Ayyaneri B.O.
Sankarankovil Tk. - Tirunelveli Dt.
Tamil Nadu - 628502 - India




